என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிரிக்கெட் சூதாட்டம்"
- 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
- பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள் மற்றும் ஐபேட், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய குற்றவாளியான பியூஷ் சோப்ரா தப்பியோடினார். போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
பியூஷ் சோப்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
போலீசார் தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை தீவிரமாக தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியை பிடித்தால் தான் இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவரும்.
- ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் நடந்து வருகிறது.
ஐதராபாத், பாலா நகர் பகுதியில் கும்பல் ஒன்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்த பச்சுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பவன்குமார், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் கவுட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு ஐபிஎல் கிரிக்கெட் குறித்து ஆன்லைனில் சூதாட்டம் நடத்திக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பாசு பள்ளியை சேர்ந்த குமார் (வயது 35), பிரகதி நகரை சேர்ந்த சீனிவாச ராவ் (33), ராம்பாபு (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20.3 லட்சம் மற்றும் 7 செல்போன்கள், 2 லேப்டாப், 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள கணேஷ், பாண்டு, ரமேஷ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த சோதனையின்போது லேப்டாப், 20 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.3.86 லட்சம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எல். போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IPL2019 #CricketBetting
இந்நிலையில், மங்களூரு பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின்போது ஐந்து விலையுயர்ந்த செல்போன்களும், ரூ.4.20 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எல். போட்டி தொடங்கிய சில நாட்களிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #IPL2019 #CricketBetting
நேற்று நடந்த 3-வது போட்டியின்போது கட்டுநாயகே மைதானத்தில் 5 இந்தியர்கள் மேட்ச் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை இலங்கை கிரிக்கெட் அணியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. #TNPL2018 #NammaOoruNammaGethu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்